Sunday, 21 December 2014

பாவப்பட்டவர்கள் பசி தீருவது எப்போது?
ஏமாற்றிப் பிழைப்போர்  திருந்துவது எப்போது?



எப்போது?

விளை நிலம் அருகிருக்க.... விளைகின்ற வித்திருக்க
விதைப்பது சிலருக்கு பெரும்பாடு!

வளர்பலம் நிறைந்திருக்க.... வளர்ச்சிக்கும் வாய்ப்பிருக்க
வளராமை சிலரது பண்பாடு!

மாளிகைபோல் வீடிருக்க.... சன்னதிபோல் குடியிருக்க
மதுவில் வீழ்ந்திருப்பர் தெருவோடு!

முன்னோர்கள் சொத்தெழுத.... வழிவந்தோர் விரைந்தழிக்க
மிதமிஞ்சும் சிலருக்கு திருவோடு!

சிலதினங்கள் விரதங்களாய்..... பலதினங்கள் பட்டினியாய்
பரிதவிக்கும் சிலர்  இங்கே படும்பாடு!

நாள் முழுக்க ல'கரங்களாய்..... உடல் முழுக்க வைரங்களாய்
பார்ப்பவர்கள் உணர்வதுதான் எப்போது?!






4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

///முன்னோர்கள் சொத்தெழுத.... வழிவந்தோர் விரைந்தழிக்க
மிதமிஞ்சும் சிலருக்கு திருவோடு!///
நன்று சொன்னீர் ஐயா
நன்றி

Ganesh R said...

தங்களை விடவா? நன்றி! நண்பரே

திண்டுக்கல் தனபாலன் said...

திருந்துவது சிரமம் தான்...

Sasi Kala said...

அனுபவப்பூர்வ கருத்துகள் மீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன். பகிர்வுக்கு நன்றிங்க.