Sunday, 21 December 2014

பாவப்பட்டவர்கள் பசி தீருவது எப்போது?
ஏமாற்றிப் பிழைப்போர்  திருந்துவது எப்போது?எப்போது?

விளை நிலம் அருகிருக்க.... விளைகின்ற வித்திருக்க
விதைப்பது சிலருக்கு பெரும்பாடு!

வளர்பலம் நிறைந்திருக்க.... வளர்ச்சிக்கும் வாய்ப்பிருக்க
வளராமை சிலரது பண்பாடு!

மாளிகைபோல் வீடிருக்க.... சன்னதிபோல் குடியிருக்க
மதுவில் வீழ்ந்திருப்பர் தெருவோடு!

முன்னோர்கள் சொத்தெழுத.... வழிவந்தோர் விரைந்தழிக்க
மிதமிஞ்சும் சிலருக்கு திருவோடு!

சிலதினங்கள் விரதங்களாய்..... பலதினங்கள் பட்டினியாய்
பரிதவிக்கும் சிலர்  இங்கே படும்பாடு!

நாள் முழுக்க ல'கரங்களாய்..... உடல் முழுக்க வைரங்களாய்
பார்ப்பவர்கள் உணர்வதுதான் எப்போது?!


Thursday, 18 December 2014


                                                                       தலைப்பு.....தலைப்பூ
தலைப்பு.....தலைப்பூ
இரண்டிற்கும் இணக்கமும் உண்டு...கிரக்கமும் உண்டு!

வகிடெடுத்த கூந்தலென்றால் சரமல்லி அழகு!

பின்னிமுடித்த கூந்தல் என்றால் முழமல்லி அழகு!

உலரவைக்கும் கூந்தல் என்றால் ஒற்றை ரோஜா அழகு!

கூந்தல் இல்லை என்றபோதும் வெறுந்தலையும்  அழகு!

பூக்களில்லா தலை நோக்கின் தலைப்பூவே அழகு!


உன்னத சொல் ஆட்சி.....உயர்வான பொருள் ஆழம்....

கனிவான கிளவியாக்கம்..... கருத்துக்கேற்ற இயைபிருந்தால்

இயல்பான தலைப்பும் அழகு!


துளிர் விடும் விதைகளில் என்னால் காணமுடிந்தது....

நான் ரசிக்க முடிந்தது....என் மனதில் பதிந்தது......


கருத்துக்கேற்ற இயைபும்....ஒன்றிணைந்த தொடர்பும்!

இடம்பெற்ற தலைப்பும்! பேசுகின்ற மலைப்பும்!

தலைப்புகளின் இயைபினை இரண்டு தலைப்புகளை இணைத்து

இங்கே பதிவு செய்கிறேன்! படிப்போர் பார்வைக்காக!


தமிழ்

இன்னுயிர் தமிழன்றோ-எங்கும்-தமிழ் கொண்டே சென்றிடுவாய்!

அரிய இலக்கியம் படித்து-அகிலத்திற்கே-அன்பு தந்தாய்!

அவள் அன்புக்கு முன்-நட்பு இல்லையேல்-வறண்டிருக்கும் என் இதயம்!

வருக இனிய தமிழ்ப்புத்தாண்டே-எழில்கொஞ்சும்-இயற்கைச் சூழலில்!

இயற்கையின் ஆற்றாமையை-கலைஞர்கள்-ஓவியத்தில் காட்ட வேண்டும்!

ஆழி சேர்ந்திடுவேனோ-அஞ்சி நடுங்கியது-மழைக்குமரம்!

ஆறுகளும் காணாமல் போனால்-மனித இனமான-நானும் தான்!

நிலக்கடலை கொறிக்கலாம்-ஓய்விருந்தால்-நானும் நானாகவே!

இனிக்கும் பண்டிகை உன்னுடனே-எப்படிச்சொல்ல-உன்னிடம் வந்ததை!

எப்படியும் பிடிப்பது-யாருக்கும்-பொன்றாக் காதல்!

எனக்காகவே என்னை நேசி-என்றைக்கும்-நீ மட்டும் என்னுடனே!

வந்ததே உனைக் கண்டதும்-மோகம்-முகம் புதைத்தாள் அவன் ஆகம்!

கனவுக் கணவனே-கூந்தல்-செம்பருத்தி அவிழ வாராயோ!

தலைவன் தலைவி பாகற்காய்-இனிப்பாக்க-தமிழே உதவமாட்டாயா!

இதுவன்றோ காதல்-புரிந்திருந்தால்-பிரிவென்பது இல்லையே!

இயற்கை

அணிலும் பாடுதே-சோக கீதம் கேட்பதற்கா-கரை சேர்ந்த ஓடுகள்?!

மண்ணிற்கும் விண்னிற்கும் காதல்-இணைக்கின்றதோ-கடற்கரை!

விடியற்காலை-கடினப்பொழுதாகிட ஏன்-ரம்மியமான அந்திப்பொழுது?!

மழைப் பொழியும் நேரம்-தத்தளித்து ஒதுங்கியது-வண்ணப் பட்டாம்பூச்சி!

சிங்காரக் காதல் காட்டி-நீ கொஞ்சும்மொழிகள்-இறகால் தூவுதல் போல!

உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்-என்றென்றும்-உன் வாசம் நுகர்ந்தவுடன்!

இன்றும் வந்தான் அவன்-வந்தவேளை-கவினுறு காலை!

இயன்றவரிடம் இயன்றதை கேட்பதுவும்-இழிசெயலே-விழிப்பாய் இரு தோழி!

தன்னடக்கமில்லா இச்சையே-கழுவேற்றும்-தலைக்கவசமே குடும்பக்கவசம்!

பயனற்ற ஆணவத்தால்-விளைவதென்ன-நாளைய சமுதாயம் நம்கையில்!

நாம் சிரிக்கும் நாளே திருநாள்-ஊமத்தைகள் சொன்னதால்-குழம்பின மேகங்கள்!

என் செய்வான் இருந்தால்-புரட்சியாளனாய்-நானாக நானிருத்தல்-முடியாதபோது!

வழிமேல் மைகலைந்த விழிவைத்து- நடந்திடினும்-ஆனைக்கும் அடி சறுக்கும்!


தாய்மை

தாய்-யாருக்கும் தெகிட்டாத-இனிமையிலும் இனிமை!

தாய் மனதிற்கு மருந்து-தம்பசியிலும்-மழலை உண்ணும் அழகு!


படைப்பு

வானம் தாண்டியும்-ஆய்வுக்கவிதை-கணிதம்!

இணைக்கும் இணையமாம்-இதழ்விரிக்கும்-புத்தகம்!

கையெழுத்தை-தலையெழுத்தாக்க-இயலாது என்றே இயம்பிடுவீரே!

முன்வருமே வெற்றி-ஊக்க நிலை வாய்த்தவர்க்கு-வளைந்தாலும் நெளிந்தாலும்!

ஆனாலும் இவர் இல்லாவிட்டால்-புதுமை இல்லை-இதுதான் காலக்கணக்கு!

இருப்பதும் இல்லாததும்-நிலையில்லா- வானவில்லாய்!


தாமரை இலை நீர்-உடனிருக்கும்-நட்பிற்கு இடைவெளி உண்டோ!