Thursday, 4 February 2016

அறியாமையை அகற்றுவோரையும், புதுமைகளைப் புகுத்துவோரையும் அறிஞர்கள் என்று அழைக்கலாம். தமிழகத்திலும் , இந்தியாவிலும் ஏன் உலக அரங்கிலும் அவ்வப்போது பல்வேறு அறிஞர்கள் தோன்றிய வண்ணமே உள்ளனர். இவர்களில் பலர் ஆன்மிகம் , அறிவியல் , அரசியல் , சட்டம் , மருத்துவம் , கல்வி , தத்துவம் போன்ற துறைகளைச் சார்ந்தவர்கள். தன் வாழ்க்கையில் பல சுவையான நிகழ்வுகளையும் , அனுபவங்களையும் கடந்துவந்தவர்கள். அந்த சுவையான நிகழ்வும் , அனுபவமும் நமக்கெல்லாம் புதிய உற்சாகத்தைத் தருவதுடன் வாழ்வின் சிக்கலான தருணங்களில் நமக்கு சிறந்த  முடிவுகள் எடுக்கவும் உதவிசெய்யும். எனவே பல்வேறு அறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகளையும் நாம் கற்று அறிய வேண்டும்.

Thursday, 28 January 2016

Instructions for prosperity swell .....

ஐஸ்வர்யம் பெருக வழிமுறைகள்.....
 1. காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளை தான் பார்க்கவேண்டும்
2. குளித்தபின்பு முதுகைத்தான் முதலில் துடைக்கவேண்டும். பின்புதான், முகத்தை
துடைக்கவேண்டும்.
குளித்தவுடன் துவட்டும்போது முதலில் மூதேவி தான் உடலில் இடம் பிடிப்பாள். பின்தான்
லட்சுமி வருவாள்.
3. பூஜைகளில் அல்லது கடவுளை வணங்கும் சமயத்தில் கைலிகள் என அழைக்கபடும்
லுங்கிகள் அணியக்கூடாது.
4. சாப்பிடும்போது இடதுகை எப்போதும் வட்டிலைத் தொட்டுகொண்டுதான் இருக்கவேண்டும்.
வட்டிலை தட்டு என்று சொல்லகூடாது. அது தட்டுபாட்டுக்கு உரிய சொல்.
5. இரவில் தயிர் சேர்த்துகொள்ளக்கூடாது.
அது விஷ்ணுவானாலும் சரி, அவரை விட்டு லட்சுமி கடாக்சம் காணாமல் போய்விடும்.
6. பூஜை அறையில் அனைவரும் பழனியாண்டவர் படம் வைத்து இருப்போம்.
அதுவும் ராஜ அலங்காரம், அதில் சிலருக்கு ஆண்டியின் கோலமான கையேந்தும் வடிவம்
இருக்கும்.
இதை எடுத்துவிட்டு ராஜா கைவைத்து இருப்பதுபோல் வைக்கவேண்டும்.
7. வீட்டின் வாசலை பார்த்தவாறு ஏழுமலையான் (பெருமாள்) படம் வைக்க வேண்டும்.
இதை பல அலுவலகங்களில் வைத்திருப்பதை நாம் இன்றும் காண முடியும்.
8. மகா சொர்ணாகர்ஷணபைரவர் படத்தையும், ஐஸ்வரேஸ்வரர் படத்தையும் கட்டாயம்
வைக்கவேண்டும்.
9. படத்திற்க்கும் கள்ளாபெட்டிக்கும் அல்லது பீரோவிலும் மல்லிகை பூ கட்டாயம்
வைக்கவேண்டும்.  இம்மல்லிகை லட்சுமிக்கு விருப்பமான பூ.
10. பணத்தை ஒருவரிடம் கொடுக்கும்போது தலை பகுதி நம்மிடம் இருக்குமாறு
கொடுக்கவேண்டும்.
11. திருவள்ளுவர் உருவம் பதித்த டாலர் அல்லது ஐந்து ரூபாய் நாணயம் பர்சில் வைத்திருக்க
வேண்டும்.
12. லட்சுமி ,குபேரர் மந்திரங்களை நாள்தோறும் கூற வேண்டும், அல்லது மகான் திருமூலர்
கூறியதுபோல ஓம் ஐஸ்வரேஸ்வராய நம என்றாவது கூறவேண்டும்.
இதை மல்லிகை பூ போடும் போது கட்டாயம் கூறவேண்டும்.
13. வீட்டின் முன்பு கண்திருஷ்டி படம் என்று கூறும் பூதம் படத்தை எடுத்துவிட்டு விநாயகர்,
முருகர் படங்களை மாட்டவும்.
அப்போது தான் தெய்வாம்சம் காணப்படும்.
அதை விடுத்து அரக்கர் படம் எல்லாம் மாட்டகூடாது.
14. விநாயகர் கோபமாக உள்ள கண்திருஷ்டி படமெல்லாம் மாட்டகூடாது.
இது எதுவுமே செய்யவில்லையென்றாலும் பரவாயில்லை ஒரு நாளைக்கு ஓரு முறையாவது
மகான் அரங்க மகாதேசிகர் அருளிய சித்தர் மந்திரம் கூறவும். அப்போதுதான் அருள்செல்வம்
முதலில் வரும். அப்புறம்தான் பொருள்செல்வம் தேடி வரும்! முடிந்தால் இதையும்
பாராயணம் செய்துப்பாருங்கள்!
ஓம் அகத்தீசாய நம!
    ஓம் கரூவூர்தேவாய நம!
  ஓம் போகதேவாய நம!
     ஓம் கோரக்கதேவாய நம!


Naamum jepippom sri RamaJayam!
'நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மையும பாவமும் சிதைந்து தேயுமே

ஜன்மமும் மரணமும் இன்றித் தீருமே இம்மையே

'
ராம' என்றிரண்டெழுத்தினால்'

Thursday, 8 January 2015

Deepavali Kavithai POtti

‘நிறை’ அர்த்தநாரி
பட்டுடுத்தி பூவை விற்கும்....
பூவை எதிர் பார்ப்பதெல்லாம்....
பட்டறிவால் ஊர் அறிந்த....
பண்பட்ட ஆண் மகனை!

மைவிழியால் மையல் கொண்டு....
மயக்கு பார்வை பார்ப்பதெல்லாம்....
தன்சுயத்தால் தானே நிற்கும்....
திண்மை கொண்ட ஆடவனை!

பூச்சரத்தை முழம் அளக்கும்....
நெஞ்சுரத்தை மனம் அளக்கும்....
பார்வையாலே தரம் அளக்கும்....
இவளுண்மை துலாக்கோலேத்தான்!


எலுமிச்சைக் கனி முகத்தாள்....
இமையசைவைப் பெற்றுவிட்டால்....
எழுமிச்சை ஆசைத் தீர்க்க....
பாரில் நாளும் போர்கள் மூளும் !

இடைநில்லா கூடைப்பூவை....
தடையில்லா மாலையாக்கி....
சுயம்வரத் தீ மூட்டிவிட்டால்....
பகை நாடும் நட்பாய் மாறும்!

பெண்மையின்றி ஆண்மையில்லை!
மென்மையில்லா மேன்மையில்லை!
ஆண்பெண் நிகர் இல்லையென்றால்....
“அர்த்த நாரி”யும் உலகில் இல்லை!!!!
          வெளிச்சம்

காலை வேளையில் கதிரவன் சிவந்து
தருவது ஓர் வெளிச்சம்!
நண்பகல் வேளையில் அவனே தருவான்
சூட்டுடன் ஒளி வெளிச்சம்!
அந்தி மாலையில் சூரியன் ஓய்ந்து
அளிப்பதும் ஓர் வெளிச்சம்
இது மானிட குணத்தை விளக்கிட வருகிற
‘திரு’வதன் ‘ஒலி’ – வெளிச்சம்!

ஈகையும் கோபமும் வெளிச்சமாய் இருந்தால்
பாதிப்பு இருப்பதில்லை!
வஞ்சனை கேடு  வெளிச்சமாய் இருந்தால்
நற்குடி வாழ்வதில்லை!
நண்பகல் வேளைப்போல் செல்வம் பெருகிடின்
பஞ்சம் நிலைப்பதில்லை!
வாழ்வினில் பக்குவம் எழுபதில் வருவதால்
மோட்சமும் கிடைப்பதில்லை!

இருட்டினில் மெழுகினை ஏற்றிடக் கிடைப்பது
சிந்தனை செயல் வெளிச்சம்!
மூடத்தைப் போக்கி கல்வியை விதைப்பது
ஆளுமை தரும் வெளிச்சம்!
ஆழ்மனம் தூண்டி அறிவொளி தருவது   ஆற்றலின் உயர் வெளிச்சம்!
நல்வழி காட்டி தலைமுறை  வளர்ப்பது
நிகரற்ற ஓர் வெளிச்சம்!
                                     
Sunday, 21 December 2014

பாவப்பட்டவர்கள் பசி தீருவது எப்போது?
ஏமாற்றிப் பிழைப்போர்  திருந்துவது எப்போது?எப்போது?

விளை நிலம் அருகிருக்க.... விளைகின்ற வித்திருக்க
விதைப்பது சிலருக்கு பெரும்பாடு!

வளர்பலம் நிறைந்திருக்க.... வளர்ச்சிக்கும் வாய்ப்பிருக்க
வளராமை சிலரது பண்பாடு!

மாளிகைபோல் வீடிருக்க.... சன்னதிபோல் குடியிருக்க
மதுவில் வீழ்ந்திருப்பர் தெருவோடு!

முன்னோர்கள் சொத்தெழுத.... வழிவந்தோர் விரைந்தழிக்க
மிதமிஞ்சும் சிலருக்கு திருவோடு!

சிலதினங்கள் விரதங்களாய்..... பலதினங்கள் பட்டினியாய்
பரிதவிக்கும் சிலர்  இங்கே படும்பாடு!

நாள் முழுக்க ல'கரங்களாய்..... உடல் முழுக்க வைரங்களாய்
பார்ப்பவர்கள் உணர்வதுதான் எப்போது?!


Thursday, 18 December 2014


                                                                       தலைப்பு.....தலைப்பூ
தலைப்பு.....தலைப்பூ
இரண்டிற்கும் இணக்கமும் உண்டு...கிரக்கமும் உண்டு!

வகிடெடுத்த கூந்தலென்றால் சரமல்லி அழகு!

பின்னிமுடித்த கூந்தல் என்றால் முழமல்லி அழகு!

உலரவைக்கும் கூந்தல் என்றால் ஒற்றை ரோஜா அழகு!

கூந்தல் இல்லை என்றபோதும் வெறுந்தலையும்  அழகு!

பூக்களில்லா தலை நோக்கின் தலைப்பூவே அழகு!


உன்னத சொல் ஆட்சி.....உயர்வான பொருள் ஆழம்....

கனிவான கிளவியாக்கம்..... கருத்துக்கேற்ற இயைபிருந்தால்

இயல்பான தலைப்பும் அழகு!


துளிர் விடும் விதைகளில் என்னால் காணமுடிந்தது....

நான் ரசிக்க முடிந்தது....என் மனதில் பதிந்தது......


கருத்துக்கேற்ற இயைபும்....ஒன்றிணைந்த தொடர்பும்!

இடம்பெற்ற தலைப்பும்! பேசுகின்ற மலைப்பும்!

தலைப்புகளின் இயைபினை இரண்டு தலைப்புகளை இணைத்து

இங்கே பதிவு செய்கிறேன்! படிப்போர் பார்வைக்காக!


தமிழ்

இன்னுயிர் தமிழன்றோ-எங்கும்-தமிழ் கொண்டே சென்றிடுவாய்!

அரிய இலக்கியம் படித்து-அகிலத்திற்கே-அன்பு தந்தாய்!

அவள் அன்புக்கு முன்-நட்பு இல்லையேல்-வறண்டிருக்கும் என் இதயம்!

வருக இனிய தமிழ்ப்புத்தாண்டே-எழில்கொஞ்சும்-இயற்கைச் சூழலில்!

இயற்கையின் ஆற்றாமையை-கலைஞர்கள்-ஓவியத்தில் காட்ட வேண்டும்!

ஆழி சேர்ந்திடுவேனோ-அஞ்சி நடுங்கியது-மழைக்குமரம்!

ஆறுகளும் காணாமல் போனால்-மனித இனமான-நானும் தான்!

நிலக்கடலை கொறிக்கலாம்-ஓய்விருந்தால்-நானும் நானாகவே!

இனிக்கும் பண்டிகை உன்னுடனே-எப்படிச்சொல்ல-உன்னிடம் வந்ததை!

எப்படியும் பிடிப்பது-யாருக்கும்-பொன்றாக் காதல்!

எனக்காகவே என்னை நேசி-என்றைக்கும்-நீ மட்டும் என்னுடனே!

வந்ததே உனைக் கண்டதும்-மோகம்-முகம் புதைத்தாள் அவன் ஆகம்!

கனவுக் கணவனே-கூந்தல்-செம்பருத்தி அவிழ வாராயோ!

தலைவன் தலைவி பாகற்காய்-இனிப்பாக்க-தமிழே உதவமாட்டாயா!

இதுவன்றோ காதல்-புரிந்திருந்தால்-பிரிவென்பது இல்லையே!

இயற்கை

அணிலும் பாடுதே-சோக கீதம் கேட்பதற்கா-கரை சேர்ந்த ஓடுகள்?!

மண்ணிற்கும் விண்னிற்கும் காதல்-இணைக்கின்றதோ-கடற்கரை!

விடியற்காலை-கடினப்பொழுதாகிட ஏன்-ரம்மியமான அந்திப்பொழுது?!

மழைப் பொழியும் நேரம்-தத்தளித்து ஒதுங்கியது-வண்ணப் பட்டாம்பூச்சி!

சிங்காரக் காதல் காட்டி-நீ கொஞ்சும்மொழிகள்-இறகால் தூவுதல் போல!

உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்-என்றென்றும்-உன் வாசம் நுகர்ந்தவுடன்!

இன்றும் வந்தான் அவன்-வந்தவேளை-கவினுறு காலை!

இயன்றவரிடம் இயன்றதை கேட்பதுவும்-இழிசெயலே-விழிப்பாய் இரு தோழி!

தன்னடக்கமில்லா இச்சையே-கழுவேற்றும்-தலைக்கவசமே குடும்பக்கவசம்!

பயனற்ற ஆணவத்தால்-விளைவதென்ன-நாளைய சமுதாயம் நம்கையில்!

நாம் சிரிக்கும் நாளே திருநாள்-ஊமத்தைகள் சொன்னதால்-குழம்பின மேகங்கள்!

என் செய்வான் இருந்தால்-புரட்சியாளனாய்-நானாக நானிருத்தல்-முடியாதபோது!

வழிமேல் மைகலைந்த விழிவைத்து- நடந்திடினும்-ஆனைக்கும் அடி சறுக்கும்!


தாய்மை

தாய்-யாருக்கும் தெகிட்டாத-இனிமையிலும் இனிமை!

தாய் மனதிற்கு மருந்து-தம்பசியிலும்-மழலை உண்ணும் அழகு!


படைப்பு

வானம் தாண்டியும்-ஆய்வுக்கவிதை-கணிதம்!

இணைக்கும் இணையமாம்-இதழ்விரிக்கும்-புத்தகம்!

கையெழுத்தை-தலையெழுத்தாக்க-இயலாது என்றே இயம்பிடுவீரே!

முன்வருமே வெற்றி-ஊக்க நிலை வாய்த்தவர்க்கு-வளைந்தாலும் நெளிந்தாலும்!

ஆனாலும் இவர் இல்லாவிட்டால்-புதுமை இல்லை-இதுதான் காலக்கணக்கு!

இருப்பதும் இல்லாததும்-நிலையில்லா- வானவில்லாய்!


தாமரை இலை நீர்-உடனிருக்கும்-நட்பிற்கு இடைவெளி உண்டோ!

Thursday, 20 November 2014

காளமேகப் புலவரின் பாடல்

காளமேகப் புலவரின் பாடல் ஒன்று….
வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை மங்காத,
சீரகத்தை தந்தீரேல் வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
வெங்காயம், வெந்தயம், பெருங்காயம் முதலியவைகளை இட்டு குழம்பு தயாரிப்பார்கள். இதில் வாங்கி வந்த வெங்காயமானது சுக்கைபோன்று உலர்ந்துபோய் விடுமாயின், வெந்தயம் இருந்தும் எந்தப் பலனும் இல்லை. எனவே அந்த சரக்குப் பொருட்கள் இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இவைகளால் கிடைக்கப்பெறும் பயனை சீரகத்தில் செய்யப்படும் இரசம் மூலம் பெறலாம். மேலும் சீரகமும் கெட்டுப்போகாத பொருளாகவே இருக்கிறது. எனவே சீரகத்தை எனக்குத் தந்தால், பெருங்காயம் எனக்குத் தேவையில்லை.
ஆனால், இந்தப் பாடலினுள் சிலேடையாக ஆழமான பொருளைப் புகுத்தியுள்ளனர். அந்தப் பொருளை இப்போது பார்ப்போம். இது திருவேரகம் என்று அழைக்கப்படும் ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையில் குடிகொண்டிருக்கும் இறைவனை நோக்கிச் சொல்வதாக வரும்.
வேரகத்துச் செட்டியாரே என்பது திருவேரகத்தில் வீற்றிருக்கும் பெருமானே!
·         வெங்காயம் என்பதில், காயம் என்பது உடம்பு, எனவே, வெங்காயம் என்பது வெறுமையான காயம், அதாவது, வெறுமையான இந்த உடம்பு,
·         சுக்கானால், அதாவது சுக்கைப்போல வாடி வதங்கிப் போனால்,
·         வெந்தயத்தால் ஆவதென்ன? வெந்த அயம் என்பது உயிர் தரிப்பதற்காக உண்ணப்படும் அயச் செந்தூரம் என்ற பொருளில் வரலாம் எனக் கூறப்படுகின்றது. எனவே உடம்பு கெட்டுப் போனால் உயிரைத் தக்க வைத்துக் கொள்ளும் இந்த அயச் செந்தூரத்தால் என்ன பயன்?
·         இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை, அதாவது, அதன் பிறகு யார் இந்த உடலைச் சுமந்து கொண்டு இருக்க விரும்புவார்கள்?
·         சீரகத்தைத் தந்தீரேல் என்பதில் சீர் + அகம், அதாவது சிறந்த மனத்தை அல்லது சிறந்த வீட்டை, அல்லது வீடுபேற்றைத் தருவீரேயானால்,
·         வேண்டேன் பெருங்காயம், பெருங்காயம் என்பது பெரிய + காயம், அல்லது பெரிய உடம்பு, அதாவது, மீண்டும் மீண்டும் பிறந்து வினையினால் அவதிப்படும் இந்த பெரிய உடம்பைக் கேட்க மாட்டேன்..

                                                        என்று பொருள்படுகின்றது.